Saturday, June 8, 2019

நூல் : பேராசிரியர் கி.ரா சில நிகழ்ச்சிகளும் சில நினைவுகளும்

ஆசிரியர் : சிலம்பு நா.செல்வராசு

வெளியீடு : அன்னம் பதிப்பகம்

தாத்தா கி.ரா அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. "நான் மழைக்குத் தான் பள்ளிகூடம் ஒதுங்கினேன். மழையையே பார்த்துக்கொண்டு இருந்து விட்டேன்" என்று கூறும்  தாத்தா அவர்கள் புதுவை மத்திய சுதந்திர பல்கலைக் கழகத்துக்கு வருதரு பேராசிரியராக எவ்வாறு வந்தார். வரக் காரணமாக இருந்தவர் யார்? பல்கலைக் கழகத்துக்கு வந்தப் பின் நடைபெற்ற நிகழ்வுகள் யாவையும் சுவைப்பட கூறுகிறார் இந்நூல் ஆசிரியர் ஐயா சிலம்பு நா.செல்வராசு.
இவர் தாத்தாவின் உதவியாளராக இருந்தவர்.

தாத்தா அவர்கள் பல்கலைக் கழகத்தில் இருந்தபோது தான் புதுவை நாட்டுப்புற கதைகள் தொகுக்கப்பட்டது. தொகுக்கப்பட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட கதைகளில் நூற்றைம்பத்து மூன்று மட்டுமே புத்தகம் போட தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நூலினையும் அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நான்கு அறைகளுக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை தாத்தா விரும்பவில்லை. எனவே அவருக்கான களமாக ஆரோவில் போன்ற வெளியிடங்களை அமைத்துக் கொண்டார். பாடம் நடத்துவது என்பது விவாதிப்பதும், கலந்துரையாடல்களும் மட்டுமே உடையது. அதேபோல் பல்கலைக் கழகத்திலிருந்த தன்னுடைய அலுவலகத்தை வீட்டிற்கே மாற்றம் செய்து கொண்டார். தாத்தாவிடம் பயின்ற மாணவர்கள் இன்றும் தாத்தாவுடன் நெருக்கமான உறவில் உள்ளனர். மாணவர்கள் வீட்டு விழாக்களிலும் தாத்தா கலந்து கொள்கிறார். பலர் பேராசிரியர்களாக உள்ளனர்.

84 பக்கங்களே உள்ள இச்சிறு நூல் இதிலுள்ள தகவலின் அடிப்படையில் தனியிடம் பிடித்துக் கொள்ளும் என்பது மிகையல்ல.

No comments:

மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மருமக்கள்வழி மான்மியம் 1916ல் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த தமிழன் என்ற இதழ...