ஜோனதன் சீகல் எனும் ஞானப் பறவை - ரிச்சர்ட் பாக்
தமிழில் - அவை நாயகம்
வெளியீடு - விஜயா பதிப்பகம்
மொத்தமுள்ள 63 பக்கத்தில் முதல் 22 பக்கங்களில் கவிஞர். புவியரசு மற்றும் தமிழ் மொழிப்பெயர்ப்பு ஆசிரியர் அவைநாயகன் ஆகியோரது முன்னுரைகளும், மூல நூல் ஆசிரியர் ரிச்சர்ட் பாக் அவர்களின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.
பல முறை பதிப்பகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, முதலில் 500 பிரதிகள் மட்டும் 1972ல் வெளிவந்துள்ளது. தற்போது பல மொழிகளில் 4 கோடி பிரதிகள் வெளிவந்துள்ளது.
கடல் பறவை அல்லது கடற்காகம் என்றழைக்கப்படும் சீகல் பறவை உணவுக்காக கடலில் படகை சுற்றி வந்து கிடைத்ததை உண்டு வாழ்த்து கடல் பரப்பிலேயே மடியும். இந்த சாதாரண வாழ்க்கை ஜோனதன் என்ற சீகல் பறவைக்கு பிடிக்கவில்லை. மற்ற சீகல் பறவைகளைப் போல் அல்லாமல் தான் உயர உயரப் பறந்து, இன்று அடைந்த இலக்கை நாளை முறியடித்து கொண்டே செல்கிறது. இப்படி 5000, 10000 , 20000 அடிகளை அடைந்து அங்கிருந்து 50, 120, 240 கி.மீ வேகத்தில் கீழ்நோக்கி செங்குத்தாக கடல் மற்றும் தரைப் பரப்பை அடைதல் என்று ஒவ்வொரு நாளும் பயிற்சியை விடா முயற்சியுடன் கூட்டிக் கொண்டே செல்கிறது. இதனால் ஜோனதன் அடைந்த துன்பங்கள் அளவற்றது. இறப்பின் அருகே சென்று வந்தப் பின்னும் தன்முயற்சியை கைவிடவில்லை.
ஜோனதனின் உயரப் பறத்தல் போன்ற செய்கைகள் அதன் கூட்டத்திற்கு பிடிக்காததால் தனித்து விடப்படுகிறது. இது போலவே காலம் செல்லச் செல்ல இளம் பறவைகளான பிளட்ச்சர் மற்றும் பிளட்ச்சரை போன்று சில பறவைகள் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டு ஜோனதனை அடைகின்றது. ஜோனதன் அவைகளுக்கு பயிற்சியளித்து அவைகளும் உயரப் பறக்க வைத்து தன் நிலையை அடையச் செய்கிறது.
முக்கியமான வரிகள் தடித்த எழுத்துக்களிலேயே தரப்பட்டுள்ளது சிறப்பு. எனக்குப் பிடித்த பல வரிகளில் சில.
"நம் படைப்பின் உன்னதத்தையும் திறனையும் அறிந்து கொண்டாக வேண்டும்".
" விட்டு விடுதலையாக வேண்டும். பறக்கப் பழக வேண்டும்".
"எதிர்காலம் இனிமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும்".
"சொர்க்கம் என்பது ஓர் இடம் கிடையாது. அது ஒரு நேரமும் கிடையாது. சொர்க்கம் என்பது குறைவில்லாதது. அது ஒரு முழுமை".
"எண்ணிக்கைக்கு எல்லை உண்டு. முழுமைக்கு எல்லை கிடையாது.
"பயணத்தை வெறுக்கும் பறவைகள் எங்கும் நகர்வதில்லை. பயணத்தின் முழுமையைத் தமக்குள்ளே வைத்திருப்பவைதான் எங்கேயும் நினைத்த மாத்திரத்தில் போய்விட முடியும்".
நாமும் ஜோனதனைப் போலவே
நிர்ணயித்துக் கொண்ட இலக்கை விடாமுயற்சியுடன் முரியடித்துக் கொண்டே சென்று மனசை இலகுவாக்கி பறப்போம்.

No comments:
Post a Comment